நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு!

நடப்பு ஆண்டில் இதுவரை நாட்டில் 97,637 டெங்கு நோய்த்தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, டெங்கு நோயினால் இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 2,146 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மாவட்ட ரீதியில் அதிகளவான டெங்கு நோய்த்தொற்றுகள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. அங்கு இந்த ஆண்டில் இதுவரை 20,742 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் 19,235 சம்பவங்களும், கண்டி மாவட்டத்தில் 7,291 சம்பவங்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,247 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *