இதன்போது பேசிய ஊடக பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
எமது பிரதேச மீனவர்கள் நீண்டகாலமாக சுருக்குவலை பாவித்து சிறிய முரல் மீன்பிடித்து வந்த நிலையில், இதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குமாறு மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக நாரா நிறுவனம் கள விஜயம் செய்து,
அவ்வேளை மீனவர்களிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த முரல் மீன் பிடிப்பதற்கான சுருக்குவலை பாவிப்பதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.
எனவே, மீன்பிடி அமைச்சரிடம் விசாரணை நடத்தி அந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான அனுமதிப் பத்திரத்தை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும்.
இருந்தபோதும் இந்த அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்காமல் மீனவர்களுக்கு பொய்களைக் கூறி அச்சுறுத்தி மீண்டும் நாரா நிறுவனம் வந்து பரிசோதனை செய்யவேண்டும்.
கடற்படை அதிகாரிகள் வந்து பார்க்கவேண்டும் என இந்த வருடம் ஜனவரி மாதம் புதுப்பித்துக் கொடுக்க வேண்டிய அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொடுக்காமல் 6 மாதங்கள் வரை வைத்துள்ளனர்.
அதன் பின்னர் தமது குடும்பத்தினரது தங்க ஆபரணங்களை ஈடுவைத்து ஒரு படகுக்கு 35 ஆயிரம் ரூபாவை கொடுக்க முன்வந்து ஒரு படகு உரிமையாளர் 35 ஆயிரம் ரூபா வீதம் 20 படகுகளுக்கான 7 இலட்சம் ரூபாய் பணத்தை கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சமாக வழங்கி அதற்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டனர்.

