வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இடம்பெற்றது.
உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாகநகரசபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சிஅ மைப்பதில் கட்சிகளிற்கிடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனநாயக தமிழ்த்தேசியகூட்டணி மற்றும் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஒன்றுகூடியுள்ளனர்.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரனின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம்அடைக்கலநாதன், ப. சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ மக்கள் விடுதலைகழகத்தின் முக்கியஸ்தர் க. சந்திரகுலசிங்கம் மோகன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க. துளசி, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி மற்றும் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


