வவுனியாவில் கிறிஸ்டி குகராஜாவின் 26ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளராக இருந்து படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்ரி குகராஜாவின்(குகன்) 26 வது நினைவுதினம் வவுனியாவில் இன்று(15) அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு அன்னாரது படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந் நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *