8 மாத விண்வெளிப் பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பிய 4 வீரர்கள்!

சர்வதேச விண்வெளி மையத்தில் (ISS) சுமார் 8 மாதங்கள் தங்கி ஆராய்ச்சிப் பணிகளை நிறைவு செய்த நான்கு விண்வெளி வீரர்கள் வியாழக்கிழமை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் அழைத்து வரப்பட்ட அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர்களான ஜெசிகா மேயர், ஜாக் ஹாத்வே, பிரான்ஸின் சோஃபி அடெனோ மற்றும் ரஷ்யாவின் ஆண்ட்ரி ஃபெட்யாவ் ஆகியோர் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கினர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் கடற்கரைக்கு அப்பால் விண்கலம் கடலில் இறங்கியதைத் தொடர்ந்து, நான்கு வீரர்களும் தங்களது விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *