ஒரே நாளில் மூன்று கொலைகள்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பல வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கடந்த 2023ஆம் ஆண்டு நாகா மற்றும் குக்கி இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களால் பெரும் உயிரிழப்புகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டு, பின்னர் அது மீளப்பெறப்பட்டது.

தற்போது மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், கம்ஜோங் மாவட்டத்தின் ஷெசத் கிராமத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரும், 42 வயதுடைய பெண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ருல் மாவட்டத்தின் ஷபு யாலோன் கிராமத்தில் சந்தீப் ராய் (40) என்பவர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அப்பகுதிகளில் பல வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மணிப்பூரில் ஒரே நாளில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *