சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கோனஹேன விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து வெயாங்கொட, மாளிகாதென்ன பகுதியில் நேற்று (31) இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 18,400 சட்டவிரோத சிகரெட்டுகள் சந்தேகநபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபாய் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுங்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், இன்று (01) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

