மெதுவான பந்துவீச்சு: இலங்கை அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி!

பாகிஸ்தானில் நடைபெற்ற முக்கோண கிரிக்கெட் தொடரில், கடந்த 29ஆம் திகதி லாகூரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசத் தவறியதற்காக இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தபோது ஒரு ஓவர் பின்தங்கியிருந்தது.

இதனால் போட்டி நடுவர் ஜெப் குரோவ் இது தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஐ.சி.சி. நடத்தை விததிகளின் 2.22 பிரிவின்படி, மெதுவான பந்துவீச்சு காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசத் தவறியமையினால் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணித் தலைவர் குசல் மெண்டிஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால், இதற்காக முறையான விசாரணை எதுவும் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

போட்டி நடுவர்களாகச் செயற்பட்ட அஹ்சன் ரசா மற்றும் ஷர்புத்துல்லா இப்னே ஷாகித், மூன்றாவது நடுவர் வெய்ன் நைல்ட்ஸ் மற்றும் நான்காவது நடுவர் நசீர் உசேன் ஆகியோர் மெதுவான பந்துவீச்சு குறித்த முறைப்பாடடை அளித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *