மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் ஜீ. சுகுணன் இன்று (02) உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வைத்தியர் ஜீ. சுகுணன் களுவாஞ்சிகுடி மற்றும் கல்முனை வைத்தியசாலைகளின் பணிப்பாளராகவும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

நீண்டகால மருத்துவ மற்றும் நிர்வாக அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள இவரது தலைமையில் வைத்தியசாலையின் மருத்துவ மற்றும் நிர்வாகச் சேவைகள் மேலும் மேம்படும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *