வீட்டுத்திட்டக் கொடுப்பனவைக் கோரி கிளிநொச்சியில் போராட்டம்!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா வீட்டுத்திட்டத்தின் எஞ்சிய கொடுப்பனவுகளை விடுவிக்கக் கோரி பயனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வீட்டுத்திட்டத்திற்கான ஆரம்பகட்ட கொடுப்பனவுகள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த நிலையில், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பருவமழை ஆரம்பித்துள்ளதால் தற்காலிக வீடுகளையும் அகற்றிய சிலர் நிரந்தர வீடுகளின்றி பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தமக்கான எஞ்சிய வீட்டுத்திட்டக் கொடுப்பனவுகளை உடனடியாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்குப் பதிலளித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் வாரத்தில் மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *