இடைத்தேர்தல் தோல்விக்கு ஈரான் விவகாரமும் காரணம் – ட்ரம்ப்

ஈரான் விவகாரம், குடியரசுக் கட்சியின் இடைத்தேர்தல் தோல்விகளுக்கு ஒரு காரணமாக அமைந்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

தற்போது ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றத் தயாராகி வருவதால், ட்ரம்பின் சட்ட முன்முயற்சிகள் சவாலுக்கு உள்ளாகக்கூடும்.

ஊடகமொன்றிற்கு அளித்த தொலைபேசி நேர்காணலில், “இதற்கு ஈரான் விவகாரமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அதே சமயம், ஈரான் தொடர்பாக நான் எடுத்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொண்டனர்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வால் ஏற்பட்ட குறுகிய கால விளைவுகளை வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், தனது அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்றும் டிரம்ப் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *