நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணம் 1.46% அதிகரிக்குமா?

2026 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88% ஆல் திருத்துமாறு நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் (NSO), யோசனை முன்வைத்துள்ளது.

எனினும் 1.46 சதவீத அதிகரிப்பை மட்டுமே இந்த காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்கான பரிந்துரையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

எவ்வாறாயினும், நாளை (5) நடைபெறவுள்ள பொதுமக்களின் கருத்துக்கேற்பு கூட்டத்தின் பின்னரே, இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுமக்களின் கருத்துக்கேற்பு கூட்டத்திற்கு பதிவு செய்ய 0770399119 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *