ஈரானுக்கு எதிரான தவறான தகவல் பரப்புரைகள் – ஜனாதிபதி எச்சரிக்கை!

ஈரான் அரசாங்கத்திற்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் எதிர்மறையான சூழலை உருவாக்குவதற்கும் எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு நாடு ஒரு போர்ச் சூழலில் இருப்பதாகவும் எதிரிகள் தங்களது முழுத் திறனையும் பயன்படுத்தி நாட்டிற்குள் பிரச்சினைகளை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பிரச்சாரங்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் திசைதிருப்பல்கள் ஆகியவை அரசாங்கத்தின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள ஈரானிய ஆயுதப் படைகளுக்குத் தமது அரசாங்கம் இரவு பகலாகவும் தனது முழுத் திறனுடனும் தொடர்ந்து ஆதரவளிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நீடித்து வரும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஏற்பட்டுள்ள இராணுவ மோதல்களுக்கு மத்தியில் ஈரானியத் தலைமைக்குள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் உள்நாட்டில் நிலவும் வதந்திகளைக் கட்டுப்படுத்தவும் இராணுவத்தின் மன உறுதியை உயர்த்தவும் பெஷேஷ்கியன் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *