சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட இறக்காமம், நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான குருளைச் சாரணர் அறிமுக விழா இன்று (18) புதன்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) வளாகத்தில் நடைபெற்றது.
உதவி மாவட்ட ஆணையாளரும் சாரணிய ஆசிரிய ஆலோசகருமான மேஜர் எம்.வை.ஏ. நாசிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 400 மாணவர்கள் பாடசாலை குருளைச் சாரணர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார், வலயக் கல்விப் பிரதிப் பணிப்பாளர்களான (நிர்வாகப் பிரிவு) ஏ.சி.என். நிலோபரா, (கல்வி அபிவிருத்தி) பி. பரமதயாளன், எச். நைறோஸ்கான், சம்மாந்துறை வலய அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) ஏ.முஸ்ற்றாக் அலி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம். ஜனோபர், மாவட்ட ஆணையாளர் எம்.ஐ. உதுமாலெப்பை, மாவட்ட உதவி ஆணையாளர்களான ஊடகவியலாளர் எம். எப். றிபாஸ், எம்.ஐ. றுஸெய்க், எஸ்.எல்.எம். கத்தாபி, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

