கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச கட்புலக் கலைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.
இதன் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றதுடன், ஏனைய பயிற்சிச் செயலமர்வுகள் மட்டக்களப்பு லேடி மெனிங் வீதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு வாவிக்கு அருகாமையில் நடைபெற்றன.
இச்செயலமர்வில் ஓவியம், சிற்பம் மற்றும் புகைப்படக்கலை ஆகிய துறைகள் தொடர்பான பயிற்சிகளும் கலைப் படைப்பாற்றலை மேம்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச கட்புலக் கலைக்குழுவின் தவிசாளர் பிரதீப் ரத்நாயக்க தலைமையிலான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, கலைத்துறையில் ஆர்வமுள்ளவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கலை உணர்வை வளர்க்கவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
“பசுமை வலயம்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இயற்கையையும் கலைத்திறனையும் ஒருங்கிணைக்கும் வகையில் இச்செயலமர்வு அமைந்திருந்தது.
இச் செயலமர்வில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களும் இந்நிகழ்விற்கு வளவாளர்களாக சிரேஸ்ட பேராசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

