நக்கிள்ஸ் சிறுமி சாதாரணதரப் பரீட்சைக்குத் தயார்!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி மற்றும் குழந்தையின் நலன் மற்றும் கல்வி உரிமையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு முன்னெடுத்துள்ளது.

அமைச்சின் ‘அர்த்த’ (யுசவாய) திட்டத்தின் கீழ் மாதாந்த வாழ்வாதார உதவித் தொகையை வழங்கவும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

15 வயது சிறுமி தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.

அதற்கமையஇ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜpன் அறிவுறுத்தலுக்கமையஇ அவர் பரீட்சைக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினூடாக உள – சமூக ஆலோசனை ஆதரவை வழங்க அமைச்சு மேலதிக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இவ்வுதவித்தொகையானது அப்பிள்ளை கட்டாயப் பாடசாலைப் பருவத்தை நிறைவு செய்யும் வரை அல்லது தனது விருப்பத்திற்கேற்ப உயர் கல்வி அல்லது தொழிற்கல்வியைத் தொடரும் வரை வழங்கப்படும்.

மேலதிகமாகஇ குழந்தையின் போசாக்கு மற்றும் சிறுமியின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் ‘அர்த்த’ உதவித்தொகையை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2026-11-18

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *