மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் தலைமைத்துவப் பண்புகள், குழு ஒத்துழைப்பு, தொடர்பாடல் மற்றும் தீர்மானம் எடுக்கும் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிப் பட்டறை இன்று (18) நடைபெற்றது.
இப்பயிற்சியில், குழுச் செயற்பாடுகள், நடைமுறைப் பயிற்சிகள், கலந்துரையாடல்கள் மற்றும் அனுபவப் பகிர்வுகள் மூலம் தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்தும் பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றது.
இதன்போது குழுப்பணி, பொறுப்புப் பகிர்வு, தலைமைத்துவத்தின் அடிப்படைகள், தலைவர் மற்றும் முகாமையாளர் ஆகியோரின் பண்புகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் தொடர்பாடல், செவிமடுத்தல் மற்றும் குழுவினரிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான செயற்பாட்டுப் பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வளவாளராக உளவள ஆலோசகர் எஸ். ஸ்ரீதரன் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் தலைமைத்துவ ஆற்றல், குழுவாகச் செயற்படும் திறன், திறமையான தொடர்பாடல் மற்றும் சவாலான சூழ்நிலைகளில் பொருத்தமான தீர்மானங்களை எடுக்கும் ஆற்றலை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டது.

