சுகாதார அமைச்சினால் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து சுகாதார அமைச்சினால் இன்று(19) மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரனின் வழிகாட்டலின் கீழ் இந்த செயல்திட்டம் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட வெட்டுக்காடு சுகாதாரப் பிரிவில் மாவட்ட தொற்றுநோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ். உதயகுமார் தலைமையில் இந்த டெங்கு பரிசோதனைகள் வீடுகள், வடிகான்கள் மற்றும் பொது இடங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
டெங்குகுடம்பிகள் இனங்கானப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
பொதுச்சுகாதார பரிசோதரர்கள், சுற்றாடல் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விமானப்படையினர் ஆகியோர் இன்றைய பரிசோதனை செயற்பாடுகளில் கலந்து கொண்டனர்.


