சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் டெங்கு பரிசோதனை வார செயற்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட இனங்காணப்பட்ட இடங்களில் விசேட டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு சுகாதாரசேவை பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பகுதியில் அண்மையில் ஒரு டெங்கு நோயாளி இனம் காணப்பட்டதை அடுத்து இந்த விசேட பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது இரண்டு வீடுகளில் டெங்கு குடம்பிகள் இனம் காணப்பட்டதை அடுத்து அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரனின் வழிகாட்டலின் கீழ் இந்த செயல் திட்டம் மாவட்ட தொற்று நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ். உதயகுமார் தலைமையில் வீடுகள், வடிகான்கள் மற்றும் பொது இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பொதுச்சுகாதார பரிசோதரர்கள், சுற்றாடல் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விமானப்படையினர் ஆகியோர் இன்றைய பரிசோதனை செயற்பாடுகளில் கலந்து கொண்டனர்.