* மத்தியஸ்தம்*
மத்தியஸ்தம் என்பது மோதல்களை தீர்க்கும் ஒரு சமூக,நீதி முறையாகும் நீதிமன்றங்களின் பாரம்பரிய முறைகளிலிருந்து வேறுபட்டு இது பேச்சுவார்த்தை, நடுநிலைப்பாங்கு மற்றும் இணக்கமான தீர்வுகளை உருவாக்குகிறது.அன்றாட வாழ்வில் மனித உறவுகளையும் சமூக இணக்கத்தையும் மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன.
* மத்தியஸ்தம் ஒரு மாற்று மோதல் தீர்வு முறை*
இது மரியாதை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுகிறது. குறிப்பாக, குடும்பப் பிணக்குகள், பணியிட மோதல்கள், சமூகப் பிரச்சினைகள் போன்றவற்றில் இந்த முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
* அன்றாட வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்*
கேட்டல் மற்றும் ஒத்துணர்வு போன்ற நுட்பங்கள், குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்கின்றன
பணியிடத்தில் ஒத்துழைப்பு மறுவடிவமைப்பு நுட்பம், பணியிட மோதல்களை குறைக்கிறது
சமூகம் ஒன்றிணைந்து செயல்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
* சவால்கள் மற்றும் தீர்வுகள்*
இந்த நுட்பங்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்த தனிநபர்கள் முதலில் தங்கள் எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கோபம் அல்லது பதட்டம் நிலவும் சூழல்களில் ஒத்துணர்வுடன் நடத்துவது கடினம். இதற்குத் தீர்வாக, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் மனநல மேலாண்மை முறைகள் உதவும்.
* முடிவு *
மத்தியஸ்தம் என்பது வெறும் மோதல் தீர்வு முறை மட்டுமல்ல தொடர்பாடல் நுட்பங்கள், தினசரி உறவுகளில் நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் அமைதியை வளர்க்கும் கருவிகளாக உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், தனிப்பட்ட மற்றும் சமூக மட்டங்களில் நிலையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
இத்தகைய மாற்றங்களே ஒரு நல்லிணக்கமான சமுதாயத்தின் அடித்தளமாகும். இந்த அணுகுமுறைகளை ஒவ்வொருவரும் பயன்படுத்தி மனித உறவுகளை மேம்படுத்தலாம்.

