எதிர்காலத்தில் இடம்பெற உள்ள தேர்தல்களில் தோல்வி பயத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றார்கள்.
எமது கட்சியானது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாகும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு அவர் அருகதை இல்லை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“வேண்டுமென்றே உங்களது கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சனைகளை தீர்வு காண வேண்டுமே தவிர வாக்களித்த மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டாம் “எனகூறினார்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பு.பிரசாந்தன் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
