பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி; சம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி  

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது.

 

பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக்-கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியுடன் மோதியது.

 

இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *