பளை வீதி விபத்தில் ஒருவர் பலி

பளை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பளை கரந்தாய் பகுதியில்  நேற்று (14) நள்ளிரவு 11.50 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பார ஊர்தியும்  கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேரடியாக நேருக்கு நேர் மோதியதின்   காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தின் தொடர்புடைய பார ஊர்தியின் சாரதி பளை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  பளை வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் நிசாந்தன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்க பளை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக பளை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *