ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையினால் பிரதேசத்தில் மின் விளக்குகள் இல்லாத வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீண்டகாலமாக இருள் சூழ்ந்து காணப்பட்ட வந்தாறுமூலை களுவன்கேணி வீதிக்கு மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரதேச சபை செயலாளர் த.கிருபைராஜனிடம் வந்தாறுமூலை சிவமுத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இவ் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
தற்போது செயலாளர் எடுத்த முயற்சியினால் வீதியானது வெளிச்சம் நிறைந்து காணப்படுகிறது இச் செயற்பாட்டினை பாராட்டி பிரதேச மக்கள் தங்களது நன்றியை செயலாளருக்கு தெரிவித்து வருகின்றனர். 

