வடமாகாண ஆளுநரும் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலருமான நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
முன்னாள் யாழ் இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன் ,பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ,கலாநிதி இராமசாமி, ரமேஸ் சட்டத்தரணி , ஜனாப் முஜிபுர் ரஹ்மான் ,சட்டத்தரணி புராதனி சிவலிங்கம் என பலர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் கலாநிதி இராமசாமி ரமேஸ்(சிரேஷ்ட அரசறிவியல் விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகம்) சட்டத்தரணி புராதனி சிவலிங்கம், சட்டத்தரணி ஜனாப் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் யாழ் இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன் ஆகியோர் சொற்பொழிவுகளை நடாத்தினர்.


