தொழிலாளர்கள் 08 பேர் குளவிக் கொட்டுக்கிழக்காகி வைத்தியசாலையில் அனுமதி

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இன்று(18) குளவிகள் கொட்டியதினால் 08 பேர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொகவந்தலாவை கெக்கரஸ்ட்வோல்ட் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 7 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றறர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *