குளவிக் கொட்டுக்கு இலக்கான 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று குளவிக் கொட்டுக்கு இலக்கானதாகவும், அதில் 09 பெண்கள் மற்றும் 03 ஆண்கள் உட்பட 12 பேர் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி இ.எஸ்.கே. ஜெயசூரியா தெரிவித்தார்.

 

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு கீழுள்ள பொகவந்தலாவ தோட்டத்தில், இன்று(19) தேயிலைச் செடிகளுக்கு இடையில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூடு மீது, தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தோட்டத் தொழிலாளியின் கால் மோதியதை அடுத்து, குளவிகள் கலைந்து கொட்டியுள்ளன.

 

நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேயிலைத் தோட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கூடு கட்டி உள்ளன, தோட்டத் தொழிலாளர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கொட்டி உள்ளமையால், தேயிலை கொழுந்து பரிப்பதை நிர்வாகம், இன்று நிறுத்தியுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *