ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் கண்காணிப்பு; 44 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வாகன கண்காணிப்பு நடவடிக்கையின் பின்னர், தனியார் வாகனங்கள், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை, பகத்தொலுவ பகுதியில் உள்ள கினிகத்தென – நாவலப்பிட்டி பிரதான வீதியில் இயங்கிய 115 வாகனங்களை அடிப்படையாகக் கொண்டு நுவரெலியா மாவட்ட வாகன பரிசோதகர் மற்றும் கினிகத்தேனை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று(19) மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை உறுதி செய்யும் நோக்குடன்  விபத்துக்களை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிக அளவில் புகை வெளிவிடுதல், இயந்திரக் கோளாறுகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்பட்ட 15  இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட பல வாகனங்கள் உடனடியாக  வீதியில்  ஒதுக்கப்பட்டன.

மேலும், அவ்வாகனங்களின் வருடாந்த வருவாய் அனுமதிகளும் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தேவையான பழுதுபார்ப்புகளை மேற்கொண்டு, ஜூன் 30 ஆம் திகதி அதே இடத்தில் தொடர் ஆய்வுக்காக வாகனங்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *