மண்மேடு சரிந்து விழும் அபாயம்; அவதானமாகச் செயற்படுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகல்ல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமானது வான்பாயும் அளவை எட்டியுள்ளதாக குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதனால் அதனை அண்டிய சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதால் குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *