தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் முன்னிலையில் அவர்கள் நேற்று(20) பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தை சேர்ந்த 8 கடற்றொழிலாளர்களை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த கடற்றொழிலாளர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், அவர்கள் நேற்று மன்னார் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

