கண்டாவளை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கரைச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(03) இடம்பெற்றது.

 

குறித்த கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தவிசாளர், உபதவிசாளர், அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பல அமைப்புகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்டதனால் எல்லைக்குள் உள்ளடக்கப்பட்ட 200 ஏக்கர் வயற்காணிகளை விடுவித்தல் மற்றும் மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

 

குறித்த கலந்துரையாடலில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரை இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது சரியான பதில் வழங்க உயர் அதிகாரிகள் வருகையின்மை காரணத்தால் குறித்த விடயம் தொடர்பாக  தீர்மானம் எடுக்கப்படவில்லை.

 

புலிகளை அழித்ததாகக் கூறும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் ஏன் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

கரைச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த வெறுமனே பொலிஸார் மற்றும் அதிகாரிகள் மாத்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லை பொதுமக்கள் பொது அமைப்புக்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதற்கு பதிலளித்த கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமகிழ்தன் புலிகளை அழித்ததாகக் கூறும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் ஏன் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லையா எனவும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்தால் சட்டவிரோத மணல் அகழ்வோரால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *