வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபை ஆளுகைகுட்பட்ட பிரதேசத்தில் பண்டிகைக் காலத்தில் வீதியில் தொல்லை ஏற்படுத்தும் வகையில் பொருட்களை காட்சிக்கு வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வீதியின் ஓரமாக நடந்து செல்லும் பொதுமக்களின் நடமாட்டங்களுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் தடுக்கும் நோக்கில் சபையின் உத்தியோகத்தர்கள் செயற்படுகின்ற போது அவர்களின் கடமைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன.
தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையானது பிரதேச சபையின் சிபார்சுகளை பெற்று வருமாறு பருத்தித்துறை வீதியில் தொல்லைகளை ஏற்படுத்த முனைபவர்களுக்கு (வர்த்தகர்களுக்கு) அறிவுறுத்தி வருகின்றார்கள்.
உடனடியாக பொது வழித் தொல்லைகளை அகற்றுவதற்கு உடன்படாத வர்த்தகர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் திரு கணேசன் கம்ஸநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பொது வழித் தொல்லைகளை அகற்றுவதே பிரதான கடமையாக உள்ளதாகவும் சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார் இச் செயற்பாடுகளுக்கு அனைத்து வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மேலும் கோருகிறார்.

