ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா

புல்லாவெளி புனித செபஸ்தியார் திருத்தலத்தின் குருநகர் பங்கு மக்களால் சிறப்பிக்கப்படும் ஆடிமாத திருவிழா இன்று(06) ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் இடம்பெற்றது.

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பங்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று காலை 6 மணியளவில் திருச்செபமாலையுடன் 7 மணியளவில் திருவிழாத் திருப்பலி ஆரம்பமானது.

இத் திருவிழாத் திருப்பலியானது கட்டைக்காட்டுப் பங்குத்தந்தை வன பிதா அமல்ராஜ் தலைமையில் ஆரம்பமாகி அருட்தந்தை ஜெபரன்சன் மற்றும் அருட்தந்தை யாவிஸ் மற்றும் அருட்தந்தை அலவன்ராஜ சிங்கன் அமலமரித்தியாகிகள் மற்றும் அருட்தந்தை றொகானால் கூட்டுத் திருப்பலியாக திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இத் திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து புனித செபஸ்தியாரின் திருச்சொரூபப்பவனியும் அதனைத் தொடர்ந்து செபஸ்தியாரின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

திருவிழாத் திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இலங்கை முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் கொடியேற்றத்தைத் தொடர்ந்து நேற்று மாலை நற்கருணை திருவிழாத் திருப்பலியானது அருட்தந்தை அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்ற நிலையில் இன்று திருவிழாத் திருப்பியும் ஒப்புக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *