இன்றைய ராசிபலன் 10.04.2025

மேஷம்:

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

ரிஷபம்:

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று கால தாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் வேற்று மொழி நபர்களின் உதவியால் அனுகூலங்கள் உண்டாகும்.

மிதுனம்:

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும்.

கடகம்:

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

சிம்மம்:

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பணத் தேவைகள் சற்று அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.

கன்னி:

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் சற்று குறையும்.

துலாம்:

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம்:

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்ப தேவைகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

தனுசு:

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதையும் நிதானமாக செய்வது நல்லது.

மகரம்:

இன்று உங்களுக்கு பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வம்பு வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

கும்பம்:

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் மறைந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

மீனம்:

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *