மேஷம்:
இன்று மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். அதனால் தடைபட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். இன்று உங்கள் மனதில் ஈகோவை விடுத்து செயல்படவும்.
ரிஷபம்:
இன்று லாபகரமான நாளாக இருக்கும். உங்களின் ஆளுமையை மேம்படுத்த பணத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தில் வயதானவர்களின் உடல் நலனில் கவனம் தேவை.
மிதுனம்:
இன்று செயல்பட வேண்டிய நாள். உங்கள் உடல் நலம் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.இன்று சமூகப் பணிகளால் பாராட்டு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்:
சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தைகள் பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் உயரும். வேலையில் நீங்கள் இருக்கக்கூடிய முயற்சிகள் நற்பலனை தரும். சிலருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். உங்கள் வேலைகளை முடிப்பதில் சிறப்ப கவனம் செலுத்தவும். துஷ்டத்தின் உதவியால் எதிர்பார்த்த பணிகளை நிறைவேற்ற முடியும்.
கன்னி:
இன்று பிள்ளைகள் தொடர்பான விஷயங்களை முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களில் முதலீடு செய்ய நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் புத்திசாலித்தனமாக திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
துலாம்:
இன்று சாதகமான பலன் கிடைக்கக்கூடிய நாள்.உங்களின் வீட்டு செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்கள் குடும்பப் பொறுப்புகளைப் புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படவும்.
விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் சூழ்நிலை நன்றாக இருக்கும், ஆனால் குடும்பத்தில் உறுப்பினரின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். காதல் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்லவும். சண்டை மனப்பான்மை இருக்கும்.
தனுசு:
இன்று உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் உணவில் முழு கவனம் செலுத்துங்கள். மன அழுத்தத்திலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள், ஆனால் தொண்டை வலி அல்லது உடல் வலியால் தொந்தரவு ஏற்படும். குடும்ப சூழல் நன்றாக இருக்கும்.
மகரம்:
இன்று சொத்து வாங்கும் விஷயத்தை பரிசீலிக்கலாம். அது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதை தவிர்க்கவும். வாகனம் வாங்க முயல்வீர்கள். காதல் வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
கும்பம்:
இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் முக்கிய பயணத்திற்கு திட்டமிடுவீர்கள், உங்கள் வருமானம் குறையலாம் மற்றும் செலவுகள் அதிகரிக்கலாம். அதனால் மன அழுத்தமான சூழல் இருக்கும். எனவே எதிலும் கவனமாக இருங்கள்.
மீனம்:
இன்று புதிதாக ஏதாவது செய்ய முயற்சிப்பீர்கள், அதில் வெற்றி பெறுவீர்கள்.உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று பிறரிடம் சிக்கியுள்ள உங்கள் பணம் திரும்பி வரலாம்.குடும்பத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

