வட, கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பூரண ஆதரவு

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இளைஞனுக்கு நீதி கோரியும், வடக்கு கிழக்கில் அதிகரித்துக் காணப்படும் இராணுவப் பிரசன்னத்தை முற்றாக நீக்ககோரியும் விடுக்கப்பட்ட 18ஆம் இடம்பெறும் பொது முடக்க போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பூரண ஆதரவை வழங்குகின்றது.

 

குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இப் போராட்டத்தின் கனதியை கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தொடர் அநீதிகளை சர்வதேச கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலும் இடம்பெறவுள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவை வழங்குமாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையினர் கேட்டுக் கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *