புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதால் விலைகளை உயர்த்தும் Spotify!!

உலகின் முன்னணி மற்றும் மிகவும் பிரபலமான இசை சேவை வழங்குநரான Spotify, புதிய அம்சங்களில் முதலீடு செய்யவுள்ளது.

அதே நேரத்தில், 1 பில்லியன் பயனர்களை இலக்காகக் கொண்டு கட்டணங்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Spotify நிறுவனத்தின் இசைச் சேவை வழங்குநரின் இணைத் தலைவரும், தலைமை வணிக அதிகாரியுமான அலெக்ஸ் நார்ஸ்ட்ராம், இந்த விலை அதிகரிப்பு புதிய சேவைகள் மற்றும் அம்சங்களுடன் வருவதாக தெரிவித்தார்.
அதன்படி, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட சந்தைகளில், மாதாந்திர விலைகள் தற்போதைய 10.99 யூரோவிலிருந்து 11.99 யூரோக்களாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *