அத்தமஸ்தானதிபதி தேரரால் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, கிழக்கு ஐக்கிய மகளிர் அமைப்பு மற்றும் கந்தளாய் மனித உரிமைகள் முதலுதவி மையம் இன்று ஊடக மாநாட்டை நடத்தின.
இதில் உரையாற்றிய கந்தளாய் மனித உரிமைகள் முதலுதவி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரங்க ரூபசிங்க பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க சட்டத்தை முறையாகச் செயற்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.
சட்டம் அனைவருக்கும் சமமானது என்றும், எவராலும் அதன் போக்கை மாற்ற முடியாது என்றும் சட்டத்தரணி காயத்ரி சூரியபண்டார இதன்போது சுட்டிக்காட்டினார்.

