விடுதியின் அறையில் இளைஞனின் சடலம் மீட்பு

திவுலப்பிட்டிய, பலகல்ல பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் நேற்று(15) இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மஹாவிலச்சிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், சடலம் கம்பஹா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *