களனிப் பல்கலைக்கழகத்தின் 153 வது பட்டமளிப்பு விழாவில் கடுகண்ணாவையைச் சேர்ந்த சாஜித் யாசின் என்ற மாணவன் நிகழ்த்தியிருக்கும் சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது
சாஜித் யாசின் தனது அசாதாரண திறமையை வெளிப்படுத்தி பல்கலைக்கழகத்தில் ஒட்டுமொத்தமாக சிறந்த திறமையை வெளிக்காட்டி உள்ளதை அங்கீகரிக்கும் வகையில் பேராசிரியர் காலோ பொன்சேகா விருது உள்ளடங்களாக ஒரே பட்டமளிப்பு விழாவில் Anatomy, Biochemistry, Physiology, Pathology, Forensic medicine, family medicine, Pharmacology, Microbiology, Parasitology, Surgery, Gynaecology and Obstetrics, and Paediatrics ஆகிய பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்று 11 தங்கப் பதக்கங்களை சாஜித் யாசின் சாதனை படைத்துள்ளார்
இதற்கான பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்றது.
அத்துடன் அண்மையில் வெளியான வைத்திய துறையின் எம்பிபிஎஸ் எம்.பி.பி.எஸ். இறுதிப் பரீட்சையின் பெறுபேறுகளில் இவர் இலங்கையில் 4 ஆம் இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாஜித் தியாசின் தனது ஆரம்பக் கல்வியை மடவளை மதினா தேசிய பாடசாலையில் சாதாரண தரம் வரை கற்றார். பின்னர் கண்டி தர்மராஜா கல்லூரியில் தனது உயர்தரக் கல்வியை வெற்றிகரமாக முடித்து களனிப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவானார்.
இவர் ஓய்வு பெற்ற கிராம சேவை அதிகாரி முஹம்மத் யாசின் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியை சித்தி மர்ஜான் தம்பதியரின் இளைய மகன் ஆவார்.
சாஜித் யாசினின் இந்த வெற்றிக்கு அவரது கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி ஆகியவையே காரணம் என அவரது விரிவுரையாளர்களும் சக மாணவர்களும் அவரை பாராட்டியுள்ளனர்

