காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் குருதிக்கொடையாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் கடந்த 29ஆம் திகதி அன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர், இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் அலீமா ரஹ்மான், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம் நஸீர்தீன் , நிர்வாக உத்தியோகத்தர் றவூப், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், குருதிக்கொடையாளர் அமைப்பின் செயலாளர் றிபாய் கலீல் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பெருமளவிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் இரத்தங்களை தானமாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.