கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தோட்ட வளாகத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வொன்றை நாளை(03) காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் டொக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில், தோட்டப் பராமரிப்புக் குழுத் தலைவரும் உதவிச் செயலாளருமான எஸார் மீராசாஹிப் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ள இம்மாபெரும் சிரமதான நிகழ்வில், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் சங்கங்களின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், நம்பிக்கையாளரும் சபையின் செயலாளரும் பொறியியலாளருமான எம்.எம். முஹம்மட் முனாஸ், பொருளாளர் தொழிலதிபர் ஏ.எல்.எம். முஸ்தபா, பிரதித் தலைவர் தொழிலதிபர் எம்.எம்.எம். முபாரக், உதவித் தலைவர் மௌலவி எம்.எம்.எம்.சலீம் (ஷர்க்கி), உதவிச் செயலாளர் ஏ. பர்ஹாம், உதவிப் பொருளாளர் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் எம். நஜீம் உட்பட நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், தோட்ட பராமரிப்புக் குழுவின் முன்னணி செயற்பாட்டாளர்களான ஏ. ஜெஸ்மீர், எம்.ஐ. நஜீம் உட்பட தோட்டப் பராமரிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் மஹல்லாவாசிகள், ஜமாஅத்தினர் ஆகியோர் இச்சிரமதான நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.