இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பகுதியைச் சேர்ந்த பயணி ஒருவரால் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 28 ஆம் திகதி சந்தேக நபரான ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் கொம்பனி வீதி ரயில் நிலையத்தில் செல்லுபடியாகும் ரயில் பயணச்சீட்டு இல்லாத பயணி ஒருவரிடமிருந்து தேசிய அடையாள அட்டையை கைப்பற்றியுள்ளார்.
பின்னர் சந்தேக நபர் அந்த தேசிய அடையாள அட்டையை மீண்டும் பயணியிடம் வழங்குவதற்கு 3,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளார்.
இலஞ்சமாக கோரப்பட்ட பணம் அதிகம் என்பதால் அதனை 1,500 ரூபாவாக குறைக்குமாறு குறித்த பயணி சந்தேக நபரிடம் கூறியுள்ளார்.
பின்னர் சந்தேக நபர் அந்த பணத்தை பெற்றுக்கொள்ளும் போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சுற்றுலா பற்றுச்சீட்டு பரிசோதகர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.