மட்டக்களப்பு மாவட்டத்தில்12 சபைகளுக்காக இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் இம்முறை 447 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பிரதான வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டன.
தேர்தல் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று(04) நண்பகல் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மாவட்டத்தின் பிரதான தேர்தல் மத்திய நிலையமான இந்துக் கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டன.
இதேவேளை பிரதான தேர்தல் மத்திய நிலையமான இந்து கல்லூரி வளாகத்தில் தேர்தல் கடமைகளுக்கான அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தேர்தல் கடமைகளுக்காக வரும் ஊழியர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் மின்சார இணைப்புகள் போக்குவரத்து ஏற்பாடுகள் என்பன தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.