இலங்கை சிலம்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிலம்பப் போட்டி

கொழும்பு: இலங்கை சிலம்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில், புனித ஜோசப் கல்லூரி கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் சர்வதேச சிலம்பப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில் இலங்கை, இந்தியா, கட்டார் மற்றும் மலேசியா ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் வீரர்களின் ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் பாரம்பரிய உடை அணிவகுப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தன. பாரம்பரியத் தற்காப்புக் கலையான சிலம்பத்தின் நுட்பங்கள், வேகம் மற்றும் திறமைகள் நிகழ்வுக்கு தனித்துவமான ஏற்படுத்தின.

சிலம்பக் கலையின் வளர்ச்சி, அதன் பாரம்பரியப் பெருமையைப் பாதுகாத்தல் மற்றும் சர்வதேச மட்டத்தில் சிலம்பத்தை உயர்த்திப் பிடித்தல் ஆகிய உயரிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

போட்டியின் முழுமையான ஏற்பாடுகளையும் இலங்கை சிலம்ப சம்மேளனம் திறம்பட மேற்கொண்டது. நிகழ்வில் விளையாட்டு ஆர்வலர்கள், பெற்றோர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்நிகழ்வு, சிலம்பக் கலைக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான மேலும் ஒரு முக்கியமான படியாக விளையாட்டு வட்டாரங்களில் பாராட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *