யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா வியாபார கிளையின் திறப்பு விழா

கிழக்கு மாகாணத்தின் தனது முதலாவது வியாபார கிளையினை யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா இன்று9100 மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் வர்த்தகர்கள் தங்களது சேவைகளை பெற்றுக் கொள்ளும் முகமாக மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

கிளையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பி.சிங்கேஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்டத்தின் வர்த்தகர்களினால் இந்நிறுவனத்தின் சேவை இன்று உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாகன தயாரிப்பில் முன்னோடிகளான ஜப்பான் நாட்டின் உயர்தரத்திலான சகல வாகனங்களும் இங்கு விற்பனை செய்யப்பட உள்ளதுடன் அவற்றுக்குரிய உதிரிப் பாகங்கள் மற்றும் விற்பனைக்கு பிந்திய சேவைகளையும் இங்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஊழியர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இன்றைய ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதுவரை காலமும் கிழக்கு மாகாண மக்கள் இந்த நிறுவனத்தின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பிற மாகாணங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. இருப்பினும் தற்போது கிழக்கு மாகாண மக்களுக்காக மட்டக்களப்பில் இன்று பிரம்மாண்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *