நெல்லியடி மத்திய கல்லூரிக்கு அமரர் தணிகைவேள் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம்

அமரர் பா. தணிகைவேள் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தின் இறுதி போட்டி நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று(10) பிற்பகல் 2:30 மணியளவில் நிகழ்ச்சி சுற்றுப் போட்டிக் குழுத் தலைவர் கனகராஜா தலையில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பண்ட் இசை முழங்க வரவேற்கப்பட்டு அமரர் தணிகைவேளது திரு உருவப் படத்திற்கு அவரது மகன் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டத்தை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அமரர் தணிகைவேளது திரு உருவ படத்திற்கு மலர் அஞசலி செலுத்தப்பட்டு 2 நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின.

3 ம் இடத்திற்கான போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியும், ஹாட்லிக் கல்லூரியும் மோதின.

இதில் இரண்டு அணிகளும் சமநிலையில் காணாப்பட்ட நிலையில் சமநிலை தவிர்ப்பு உதையில் ஹட்லிக் கல்லூரி  அணி  3ம் இடத்தினை தனதாக்கிக்கொண்டது.

தொடர்ந்து முதலாம் இரண்டாம் இடத்திற்காக நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அணியும் மோதின.

இதில் இரண்டு கோல்களைப் போட்டு நெல்லியடி மத்திய கல்லூரி அணி  முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது.

இரண்டாம் இடத்தினை கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அணியும் பெற்றுக் கொண்டன.

வெற்றி பெற்ற பாடசாலை அணிகளுக்கான கேடயம், பரிசில், பதக்கம், சான்றிதழ் என்பவற்றை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் இராஜசீலன், கெளரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் சேதுராஜா, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் கலைச்செல்வன், நெல்லியடி மத்திய கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் கிருஸ்ணகுமார், உடுத்துறை மகா வித்தியாலயத்தின் அதிபர் தேவராஜா, வடமராட்சி கல்வி வலய ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வக்குமரன் ஆகியோர் வழங்கி கெளரவித்தனர்.

சிறப்புரையினையும், இரங்கல் உரையினையும் வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உதைபந்தாட்ட வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *