மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(11) மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் முகமட் பாசில் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் விளையாட்டிற்கான உதவி உடற்கல்விப் பணிப்பாளர் லவக்குமாரும், கௌரவ அதிதியாக விஞ்ஞான பாடத்திட்டத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் ஞானசேகரனும் கலந்து கொண்டனர்.
இல்ல விளையாட்டுப் போட்டியின் முடிவில் யமுனை இல்லம் 739 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், கங்கை இல்லம் 695 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், காவேரி இல்லம் 685 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இந்நிகழ்வில் நடைபெற்ற வண்ணமயமான அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் பேண்ட் வாத்திய நிகழ்ச்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



