அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்ட விநாயகபுரம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா பாடசாலை அதிபர் ஜெயகாந் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் உதயகுமார், திருக்கோவில் பொலிஸ்நிலையப்பிரதம பொலிஸ் பரிசோதகர் லலித்தபீரிஸ், வடமத்தியமாகாண இலங்கை வங்கி முகாமையாளர் ஜெயசந்திரன், திருக்கோவில் ஆசிரியர் வள மத்திய நிலைய விரிவுரையாளர் விக்னேஸ்வரன், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப்பாளர்கள், மதகுருமார், வங்கி முகாமையாளர்கள், அனுசரனையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், அனுசரனையாளர்கள் ஆலயங்களின் நிர்வாகத்தினர் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப்பொதிகளும் வெற்றிக் கிண்ணங்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.


