ஊடகம் என்பது சமூகத்தோடு இரண்டறக் கலந்த ஒன்று. சமூகத்தில் நிலவுகின்றவைகள் அச்சமுகத்திற்கு வருகின்ற செய்திகள் சகலதையும் நேர்மையாகவும் தெளிவாகவும் உண்மையாகவும் சொல்லும்போது தான் சமூகத்தில் அச்செய்திகளும் அந்த செய்தியாளர்களும் பேசப்படுவார்கள். அப்படியான நடுநிலையான எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்துக்களையும் சமூகம் நம்பும்.
இன்று தத்தமது எண்ண வெளிப்பாடுகளுக்கு ஏற்ப வரிந்து கட்டிக்கொண்டு சமூக ஊடகவியலாளர்கள் பலர் வாழ்ந்தாலும் பத்திரிகை துறையிலும் தொலைக்காட்சி, வானொலி என தடம்பதித்த சிரேஷ்ட எழுத்தாளர்கள் என்றும் நம் மத்தியில் பேசப்படுவார்கள். அந்த வகையில் காலம் கடந்தும் பேசப்படுகின்றவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ. எல். எம். சலீம் அவர்கள். நமது இயக்கத்தின் மறைந்த பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு பத்திரிகையாளராக இவரை நான் பார்த்திருக்கிறேன். சமூகம் பல்வேறு விதமான நெருக்கல்களுக்கு உள்ளான காலங்களிலும் தனது துணிச்சலான எழுத்துக்களால் நமது மக்கள் மத்தியிலும் குறிப்பாக தேசிய ரீதியிலும் நிலை கொண்ட பெயர் பெற்றவர் ஊடகவியலாளர் சலீம் அவர்கள்.
இன்று சமூகம் உன்னதமான தைரியமான ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளரை இழந்து நிற்கிறது. இந்த இழப்பு என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல நமது மாவட்டம் மாகாணம் தேசிய ரீதியிலும் ஒரு பேரிழப்பாகவே நான் பார்க்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அண்ணாரை பொருந்திக் கொள்ள வேண்டி அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலை வழங்க பிரார்த்தனை செய்கிறேன்.
எம்.எஸ்.உதுமாலெப்பை [பா.உ]
பிரதித் தேசிய அமைப்பாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

